தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 22 பேருந்துகளின் துவக்கவிழா ஈரோடு பேருந்துநிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தவை:
*மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
*11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
*2017 - 2018 ம் ஆண்டு 12 ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
* நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
*தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் போட்டி தேர்வு நடத்தப்படும்.
*அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஷூ வழங்கப்படும்
இதேபோல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: