ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை பூக்கள் அதிகபட்சமாக 6 டன் வரை இருக்கும். தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோதான் வந்துள்ளது.
இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பனி காலம் முடியும் வரை பூக்களின் வரத்து குறைவாகவே இருக்குமெனவும், இதனால் வியாபாரிகளுக்கு எந்த லாபமும் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்