கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, நியாய விலைக்கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கூட்ட நெரிச்சலை தவிர்க்கவும், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வீடு வீடாக வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தில் முகக்கசவம், கையுறை, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாயை நியாய விலைக் கடை ஊழியர்கள் வழங்கினர். முன்னதாக அவர்களிடம் கையெழுத்து அல்லது கைரேகை பெற்றுக் கொண்டு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவால் சென்னையில் காற்று மாசு குறைவு!