ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு உபதொழிலாக இருப்பதால் தினந்தோறும் இப்பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது மாடுகளின் உடம்பில் அம்மை நோய் தாக்கியுள்ளது. அதன் உடல் முழுவதிலும் புண் ஏற்பட்டு மேய்ச்சலில் ஈடுபடமுடியவில்லை. வாய்ப்புகுதியிலும் புண் பரவியதால் தீவனம் சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவர்கள் மாடுகளை பரிசோதனை செய்ததில் இந்நோய்க்கு தடுப்பு மருந்து இல்லையென்றும், நாட்டு மருந்தான மஞ்சள், வேப்பிலை போன்ற மருந்துகள் தடவும் படியும் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் மருந்து, ஊசி செலுத்தியும் பயனில்லை. தற்போது ஒவ்வொரு மாடுகள் குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை போன நிலையில், தற்போது மாடுகள் நோய் பாதிப்பால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அருகே பாப்பாங்காட்டூர் கிராமத்தில் 26 கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் ஆறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் கால்நடை வளர்போர்கள் தெரிவித்தனர்.
கால்நடைகளை தாக்கும் இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் மத்திய- மாநில அரசுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளைத் தப்ப விட்டுவிடாதீர்!