கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாடு முழுவதும் நலம் பெறவும், மக்கள் பாதிப்பின்றி வாழ்ந்திடவும் ஈரோட்டைச் சேர்ந்த தந்தை, மகன் கடந்த இரண்டு மாதங்களாக நாள்தோறும் இசை நிகழ்ச்சி நடத்திவருகின்றனர்.
கடவுள் திருவுருவப் படங்களின் முன்னிலையில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கச்சேரியில் அவர்களது வீட்டு பெண்களும் தாளமிடுகின்றனர்.
கரோனாவில் இருந்து மக்கள் விடுபட தினமும் இசை நிகழ்ச்சி ! கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தும், தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதுவரை 64 ஆயிரத்து 603 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 833 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க...காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - ஜெயராஜ் மனைவி புகார்