கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க நாடெங்கும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலைக் கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேரிடரிலிருந்து மக்களைக் காப்பற்ற தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் மகத்தானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு பணிக்கு உதவும் வகையில், மக்கள் மாநில அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்திய வனப்பணி சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், ஒரு நாள் ஊதியத்தை, மாநில நிவராணப் பணி்க்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றினர். ஒற்றுமையின் அடையாளமாக, கரோனா வைரசை ஒழிக்கும் பணியில் பங்களிக்கவுள்ளதாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிகிச்சை அளிக்காவிட்டால் தனியார் மருத்துவமனை உரிமம் ரத்து !