ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ள தாராபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார். இதையடுத்து பரப்புரையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது;
இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் வதந்தியே, நான் இஸ்லாமிய மக்களை நேசிக்க கூடியவன். ஒருபோதும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன்.
மேலும் அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்காகவே செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.