திரைப்படங்களில் சிறிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் அருள்மணி ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களைப் பொறுத்தவரை மாற்றத்திற்கு உட்பட்டது. கடந்த காலங்களில் நெகட்டிவ்களில் எடுக்கப்பட்ட படங்கள், தற்போது டிஜிட்டலில் எடுக்கப்படுகின்றன. இனி வருங்காலங்களி இதுவும் மாறக்கூடும். அதானல் திரைப்படங்களை தயாரித்து நீண்ட நாட்களாக வைத்திருக்க முடியாத நிலையில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
திரைப்படங்களை நம்பியும், திரையரங்குகளை நம்பியும் தொழிலாளர்கள் வாழ்க்கை இருப்பதால் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் சரியான முடிவுகளை எடுத்துள்ளனர்" தெரிவித்தார்.
இதையும் படிங்க:13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு !