ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் ஜீப் மோதி விபத்து - கணவன் மனைவி உயிரிழப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர்.

Husband's wife dies after collision with jeep in two-wheeler

author img

By

Published : May 26, 2020, 9:42 PM IST

திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஷேக்முகைதீன் - ரம்ஜான்பீபி. இவர்களது மகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை முடிந்து தனது மகளை பார்க்க சேக் முகைதீன், தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது விண்ணப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது வலைவு பகுதியில் அதிவேகமாக வந்த ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சேக் முகைதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவில் ரம்ஜான் பீபி உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஜீப் ஓட்டுநர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளை காணச்சென்ற பெற்றோர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: மூன்று பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.