ஈரோடு: புஞ்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் ரேஷன் கடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரிதா (30). இவர்களுக்கு 3 வயதில் பவன் கிருத்திக் என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில், கணவன் மனைவியிடையே கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி செல்வராஜ் வேலைக்குச் சென்றுவிட்டார். சரிதா தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கணவருக்கும் மனைவிக்கும் இடையே செல்போனில் ஏற்பட்ட தகராறில், கணவர் செல்வராஜ் மனைவியை நீ செத்து போ என கூறியதாகவும், இதனால் மனமுடைந்த சரிதா தனது குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மனைவி சரிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த புஞ்செய்புளியம்பட்டி காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளதால் தற்கொலை வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க:போதையில் போலீசார் மீது தாக்குதல்.. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு