ETV Bharat / state

கோமாவில் இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு! - கோமாவில் இருக்கும் வேட்டை தடுப்பு காவலர்

சத்தியமங்கலத்தில் வேட்டை தடுப்பு காவலர் மலையில் இருந்து தவறி விழுந்த விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பணமின்றி தவித்து வருகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 12, 2023, 8:25 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ஆசனூர் வனச்சரகம் அரேப்பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் மற்றும் தன்னுடன் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒரு குழுவாகக் காட்டுத்தீயை அணைப்பதற்காகச் சென்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது ஏறும் போது ஆனந்த் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் கீழே இருந்த பாறையில் தலையின் பின்புறம் அடிபட்டதால் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் அவரை மீட்டு உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆனந்த்துக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் சுயநினைவின்றி கோமா நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கு மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் சூழ்நிலையில் உடன் இருக்கும் வனத்துறை ஊழியர்கள் ஒரு சிலர் சிறிதளவு பண உதவி செய்துள்ளனர்.

வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க சென்றபோது தவறி விழுந்து தற்போது உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்தின் குடும்பத்தாருக்கு மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான பணம் வழங்கி உதவுமாறு ஆனந்தின் நண்பர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உதவி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: தப்பிக்க முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.