ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி கொள்ளுமேட்டு காலனியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (40) இவர் ஒரு கூலித் தொழிலாளி. இன்று காலை வெள்ளியங்கிரி, மனைவி அய்யம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றி எறிந்தது. அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பரவியது.
மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் என வீட்டிற்குள் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பவானி ஆற்று படித்துறையில் விநாயகர் கோயிலில் மணி மண்டபம் கட்ட தடை