ஈரோடு: அந்தியூர் பகுதியில் குதிரை ரேக்ளா பந்தயம் நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இப்பந்தயத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகளை அப்பகுதி சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர். குதிரைகள் கெட்டிசமுத்திரம் ஏரிப் பகுதியில் சென்றபோது ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர் சாலையின் நடுவே பாய்ந்தது.
அதன்மேல் பயணித்த குதிரைகள் அடுத்தடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பந்தயத்தில் பங்கேற்ற வீரரும் குதிரைகளும் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து வந்த குதிரைகளும் கீழே விழுந்ததை கண்ட பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: 'ஈரோடு மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு' - அமைச்சர் முத்துசாமி