சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை வரசித்தி விநாயகர் ஆலய கமிட்டி குழுவினர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கோயிலின் முன்பகுதியில் முன்மண்டபம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்தக் கோயிலின் எதிரே எவ்வித முன் அனுமதியுமின்றி முன்மண்டபம் கட்டுவதாகவும், இதனால் விநாயகர் சதுர்த்தியின்போது இப்பகுதியில் விநாயகர் சிலைகளை பவானி ஆற்றில் கரைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறி இந்து முன்னணி அமைப்பினர் பணிகளை நிறுத்தக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், கோட்டாட்சியர் கோபி முன்னிலையில் பொதுப்பணித் துறை அலுவலர்கள், காவல் துறையினர், கோயில் கமிட்டியினர், இந்து முன்னணி அமைப்பினர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் வாசிங்க : வாக்கு எந்திரங்களை சேமிக்கும் கிடங்குகள் அமைக்க ரூ.120.87 கோடி நிதி ஒதுக்கீடு!