ஈரோட்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணிதலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து 27 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதே சமயத்தில் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
![ஏன் வழிபாட்டுத் தலங்கள் திறக்கக் கூடாது?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-indu-munnani-vis-tn10009_25062021151025_2506f_1624614025_670.jpg)
அனைத்து கோயில்களும் திறக்க வேண்டும்
மதுபான கடைகள் திறக்கும்போது நோய்கள் வராது என்றால், கோயில் திறக்கும்போது மட்டும் வருமா? என்ற கேள்வியை முன்வைத்து இந்து முன்னணியினர் சத்தியமங்கலத்தில் இன்று (ஜூன் 25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் பவானி ஈசுவரர் ஆலயம் முன் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி வணங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "அனைத்து கோயில்களும் உடனே திறக்க வேண்டும். அரசு எங்கள் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறு வணிக கடனுதவி'