ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள தாமரைச்செல்வன், அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் நேரு உள்ளிட்ட மூன்று பேர் மின்ன வேட்டுவம் பாளையத்தில், விவசாய நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்டு பண்ணை வளர்ப்பிற்காக குத்தகைக்கு எடுத்தனர்.
இந்த நிலத்தில், கள்ளச்சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் காய்ச்ச தயார் நிலையில் இருந்த 60 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கண்டுபிடித்தனர்.அந்த ஊறலை அழித்த காவல்துறையினர், சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த எரிவாயு சிலிண்டர், அடுப்பு மண்பானை ஆகியவற்றை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நிலத்துக்குள் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது!