ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் நடமாடுவது வழக்கமாகியுள்ளது.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் 4 ஆயிரம் வாகனங்கள் பயணித்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக தற்போது ஆயிரம் வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.
காய்கறி, பால், பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்கள், மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டும் மாநில எல்லையை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வெறிச்சோடி கிடப்பதால் வனவிலங்குகள் சாலையில் உல்லாசமாக சுற்றி திரிகின்றன.
அதிலும் சில நாள்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை நோக்கி படையெடுக்கின்றன. காராப்பள்ளம் என்ற இடத்தில் யானைகள் ரோட்டில் குட்டிகளுடன் நடமாடி வருவதால், அவ்வழியே செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்கும் மறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், யானைகள் சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், பாதுகாப்புடன் செல்லும்மாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.