ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்தத் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதிக பாரம், அதிக நீளமுள்ள 14 சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோயமுத்தூரில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தப்போது 9ஆவது வளைவில் லாரியின் பின்புற சக்கரம் பழுதாகி அதே இடத்தில் நின்றது.
லாரி வளைவில் குறுக்கே நின்றதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதில் திம்பம், ஆசனூர் மலைப்பாதையில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அங்கு வந்த மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைத்தனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கு பின் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.