ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி! - Fog on the Thimphu Hill Trail

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் முற்பகலில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

கடும் பனி மூட்டம்
கடும் பனி மூட்டம்
author img

By

Published : Nov 3, 2020, 1:21 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் அப்பகுதியானது மிகவும் குளிர்ந்து இதமான கால நிலை நிலவுகிறது. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில்,ஆசனூரில் காலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால் திம்பம் வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளில் 20ஆவது வளைவு வரை, வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டமாக உள்ளது. ஆகையால், மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மித வேகத்தில் வாகன ஓட்டிகள் இயக்கியதால், தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள திம்பம் மலைப்பாதையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர்.

இதனால் பண்ணாரியில் இருந்து ஆசனூருக்கு மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் ஒரு மணிநேரத்தில் இரு மடங்கு நேரம் விரயம் ஆனது. கடும் பனிப்பொழிவு காரணமாக, எதிரே வரும் விலங்குகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திம்பம் மலைப்பாதையில் காணப்படும் பனி மூட்டம்
இதையும் படிங்க: முத்துகோரமலையின் ரம்மியமான காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.