தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையே பயணிக்கும் வாகனங்கள் தாளவாடி, ஆசனூர், திம்பம் வழியாகச் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கர்நாடக பயணிகள் தமிழ்நாடு வந்து செல்கின்றனர்.
இதையடுத்து கரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு மாநில எல்லையான புளிஞ்சூரில் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கர்நாடகத்திலிருந்த வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இது குறித்து சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடகப் பயணிகள் சோதனைக்குள்படுத்தப்படுவர். அவர்கள் கரோனா அறிகுறியுடன் தென்பட்டால் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு தனிவேனில் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
இதையும் படிங்க... வெளிநாடுகளிலிருந்த சென்னை வந்த 56 பேருக்கு கரோனா அறிகுறியா? - மருத்துவமனையில் அனுமதி