ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காசிபாளையம், குருமந்தூர், கோசணம், அஞ்சானூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.6.19 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், "அரையாண்டுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது. பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கள்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு ஐந்து நாள்களில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்.
அதிமுகவின் தேர்தல் பரப்புரை, தேர்தல் குழுவின் வழிகாட்டுதல்படி தொடங்கும். புயல் நிவாரணம் குறித்து குற்றஞ்சாட்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவர் மேயராக இருந்தபோது மழை பாதிப்புகள் குறித்து தெரியாமல் போய்விட்டது.
தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெறுவது மக்கள் கையில்தான் உள்ளது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது’-அமைச்சர் காமராஜ்!