ஈரோடு: திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி .இவரது மகள் நித்யா. இவர் தனது கணவர் பாஸ்கருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மகதி (11) என்ற மகளும் யாதவ்கிருஷ்ணன் (7) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், பாஸ்கர் கடந்த மாதம் கரோனா காரணமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்ததையடுத்து நித்யா தனது குழந்தைகளுடன் ஈரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நித்யா, தனது கணவர் இறந்த தினம் முதல் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (ஜூன்.24) தனது குழந்தைகளுடன் படுக்க சென்ற நித்யா இன்று காலை வெகு நேரமாகியும் வெளியே வருவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பார்த்தசாரதி படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
![death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-3persondead-img-tn10051_25062021124546_2506f_1624605346_594.jpg)
அப்போது மகள், பேரன், பேத்தி ஆகிய மூவரும் நச்சு அருந்திய நிலையில் மயக்கத்துடன் இருந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி மூவரையும் சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்கள் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.