கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அனீஸ். இவருக்கு ஆதர்ஸ், ஆகாஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆகாஸ் துபாயியில் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் ஆகாஸ் விடுமுறையில் துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார்.
இவரை வரவேற்பதற்காக அனீஸும், ஆதர்ஸும் காரில் பெங்களூரு விமான நிலையம் நோக்கி பயணித்தனர். பின் அவர்கள் ஆகாஸை கூட்டிக்கொண்டு பெங்களூவில் இருந்து கேரளாவிற்குச் சென்றனர். காரை ஆதர்ஸ் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த புங்கம்பள்ளி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது கோவையில் இருந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் காரின் முகப்பு பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூன்று பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அனீஸ், ஆதர்ஸ் உயிழந்தனர்.
இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக் மீது புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.