ETV Bharat / state

பயணிகளுக்காக காத்திருந்தபோது ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்! - Government bus driver Shanmugam

ஈரோடு: சத்தியமங்கலம் பண்ணாரி கோயிலில் பயணிகள் வருகைக்காக காத்திருந்தபோது அரசுப்பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

pollachi
pollachi
author img

By

Published : Dec 4, 2020, 6:45 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து 20 பேருடன் புறப்பட்ட நகர்ப்புறப் பேருந்து, பிற்பகலில் பண்ணாரி கோயிலைச் சென்றடைந்தது. பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டுநர் சண்முகம் காத்திருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்ட அரைமணி நேரத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பணியின்போது உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்துக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆறுதல் கூறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.