ஈரோடு மாவட்டம் பவானியில் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளியின் போது சீன பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடி தமிழின் பெருமையை உலகமே தெரிந்து கொள்ளும் வகையில் முதன்மைப்படுத்தி பேசி வருவது தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் பெருமையளிக்கக் கூடியது என்பதால் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பிரதமருக்கு நன்றி செலுத்திடும் வகையில் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு தீபாவளிப் பண்டிகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் செய்தித்தாள்களில் படித்தேன். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடப்படும் ஆண்டில், மதுவற்ற தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு அக்.26, 27, 28 ஆகிய நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி!