ஈரோடு: கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை.05) முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம்செய்யப்பட்டு பின் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பொதுப் போக்குவரத்து இல்லாததால் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்துகள் தலமலை வழியாக இரு மாநில எல்லையான தாளவாடி சென்றன. தற்போது 45 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வருகையை பொறுத்து அரசு பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 நாள்களுக்குப் பிறகு சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!