ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோட்டிற்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற பேருந்தில் கவுந்தப்பாடி என்ற இடத்தில் பயணித்த முதியவர் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் நுழைவுச்சீட்டு வாங்கும்போது சில்லறைக் கொடுப்பதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நடத்துநர் முதியவரை சரமாரியாகத் தாக்கியதுடன் தகாதவார்த்தையில் பேசியுள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இந்தக் காணொலி ஈரோடு போக்குவரத்துக் கழக அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதால் நடத்துநர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள்கள் விற்ற நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!