ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிய அரசுப் பேருந்து- லாரி: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்து மீது, லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.

அரசு பேருந்து
அரசு பேருந்து
author img

By

Published : Nov 11, 2020, 7:02 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற அரசுப் பேருந்து, சத்தியமங்கலம் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

அப்போது அரசுப் பேருந்து ஆசனூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதிகள் செம்மண் திட்டு அருகே சென்றபோது, சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு நோக்கி அதிவேகமாகச் சென்ற லாரி எதிரே வந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், ஓட்டுநர் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதையடுத்து விபத்து குறித்த தகவல் அறிந்த ஆசனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ரூ. 5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.