ஈரோடு: தாளவாடி பகுதியில் பழங்குடியினர், மலைவாழ் மக்கள் உள்பட சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
தாளவாடி வட்டத்தில் ஆசனூர், தாளவாடி, மல்லன்குழி, சூசைபுரம் மற்றும் பனஹள்ளி ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 1,000 பேர் மேல்நிலை கல்வி பயிலுகின்றனர். இவர்கள் படிப்பதற்கு 60 கி.மீ தூரம் உள்ள சத்தியமங்கலம், கோபி மற்றும் கோவை செல்ல வேண்டியுள்ளது.
இதன் காரணமாக தாளவாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது புதியதாக பொறுபேற்றுள்ள திமுக அரசு, தமிழ்நாட்டில் மேலும் 10 அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதில் தாளவாடியிலும் அரசு கலைக்கல்லுரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு - இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு