ETV Bharat / state

அரசு, தனியார் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி!

சத்தியமங்கலத்தில், நேற்று மாலை 6 மணிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் திருப்பூர், கோவை செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

பேருந்துகள் நிறுத்தம்
பேருந்துகள் நிறுத்தம்
author img

By

Published : May 10, 2021, 6:31 AM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் நாளை (மே.10) முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. பொது முடக்கத்தின் போது பேருந்து, வாடகை கார், ஆம்னி பேருந்துகள், ஆட்டோ போன்ற போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகிறது. இதனால் சத்தியமங்கலத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் இன்று (மே.09) காலை முதலே திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற இடங்களுக்கு பேருந்தில் பயணித்தனர்.

இந்நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் திருப்பூர், கோவை செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள், பேருந்து வசதி செய்து தரக்கோரி போக்குவரத்து கழக அலுவலர்களிடம் முறையிட்டனர்.

இதயைடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்த ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டது கோவைக்கு அனுப்பப்பட்டது. அப்போது பயணிகள் கரோனா விதிமுறைகளையும் மீறி முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். 50 விழுக்காடு பயணிகளுக்குப் பதிலாக 100 விழுக்காடு பயணிகள் பேருந்தில் பயணித்தனர். திருப்பூர், ஈரோடுக்கு பேருந்து வராததால் பயணிகள் வாடகை கார், வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: பாதுகாப்பு பணியில் பத்தாயிரம் காவல் துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.