ETV Bharat / state

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூவர் மீது குண்டர் சட்டம்!

ஈரோடு: சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவந்த மூவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டம்
குண்டர் தடுப்புச் சட்டம்
author img

By

Published : Sep 17, 2020, 10:18 PM IST

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலைப்பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ், ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த சாய்பிரகாஷ் ஆகிய மூவரும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இவர்களை காவல்துறையினர் பலமுறை கைது செய்தும் தண்டனை வழங்கியும் அதைப் பொருட்படுத்தாமல் மூவரும் இருந்துள்ளனர். பின்னர் இவர்களை கட்டுப்படுத்துவதற்கு மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பல்வேறு தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 25 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இதுபோன்ற தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவோர் தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.