ETV Bharat / state

த.மா.காவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் - ஜி.கே.வாசன் - ஈரோடு பொதுகூட்டம்

2 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அளிக்க முடியவில்லை எனில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

gk vaasan
ஜி.கே வாசன்
author img

By

Published : Jul 16, 2023, 1:51 PM IST

ஈரோடு பொதுகூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பேச்சு

ஈரோடு: ஈரோடு திண்டல் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராரின் 121வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், “காமராஜரின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பயணமாகத்தான் இருந்தது. ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தொழில் கொள்ளை செய்து வருகின்றனர். தொழில் வளத்தைப் பெருக்காமால் சாராயக் கடையை மட்டுமே திறந்து வருகிறது” என குற்றம் சாட்டினார்.

மத்தியில் ஆட்சியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரிந்து 9 வருடங்கள் கடந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெற்றுக் கொடுத்த அங்கீகாரத்தை கூட காங்கிரஸ் கட்சி இழந்து நிற்பதாக கூறினார். “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி மத்தியில் இணக்கமான முறையில் இருந்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: Kalaingar library: ஷிவ் நாடாரை அழைத்தது ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

ஆனால், இன்று திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்று சொன்ன திமுகவினர், இன்று கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதால் திமுக அரசு மாணவர்களின் அறிவுக் கூர்மையை மெருகேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் மோசமான சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு மதுபானக் கடையே காரணம். மேலும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக, பாஜக போன்ற ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியோடு பயணிக்கும். விரைவில் நாடாளுமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரல் ஒலிக்கும்” என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் “தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குகளை இன்று வரை நிறைவேற்றவே இல்லை. மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினர். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வாக்குறுதியை செயல்படுத்துவதில் பாகுபாடு பார்க்கப்படுகிறது. 2 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை செலுத்த முடியவில்லை எனில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” எனறார்.

இதையும் படிங்க: வடிவேலு பாணியில் 6 மூட்டை அரிசியை அசால்ட்டாக திருடிய மர்ம நபர்.. சூப்பர் மார்க்கெட்டில் நூதன திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.