ஈரோடு தெற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் (அக் 20) போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த சூரம்பட்டி, நேதாஜி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்கிற அத்தி, காசிபாளையம் கார்த்தி, சாஸ்திரிநகர் பிரகாஷ், அம்பேத்கர் வீதி ரோகித், ஸ்டாலின் வீதியை சேர்ந்த ஹரிஹரன், பெரியவலசு சுப்பிரமணியன் வீதியை சேர்ந்த பிரிட்டோ உள்பட மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதில் கைது செய்யப்பட்ட 8 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 2.25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் வீட்டில் ரூ.7 லட்சம் பறிமுதல்