ETV Bharat / state

முழு ஊரடங்கு - ஈரோட்டில் வெறிச்சோடிய சாலைகள்! - Full curfew in Erode

ஈரோடு: முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது.

வெறிச்சோடிய சாலைகள்
வெறிச்சோடிய சாலைகள்
author img

By

Published : Jul 19, 2020, 12:47 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடவும், நோய்ப்பரவலைக் குறைத்திடவும் தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதத்திலுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு நடைபெற்று வருகிறது.

இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று(ஜூலை 19) ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஈரோட்டிலுள்ள முக்கியப் பிரதான சாலைகள், முக்கிய சந்திப்புகளில் வழக்கத்தை விடவும் கூடுதலான காவல் துறையினர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முழு ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றாமல் எந்தக் காரணங்களுமின்றி, வீடுகளை விட்டு வெளியேறி, வாகனங்களில் சுற்றுபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் மாவட்டத்திலுள்ள 135-க்கும் மேற்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைப் பகுதிகளைக் கடப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மாநகரத்தின் முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதையும் படிங்க: பொது இடங்களில் இதை செய்யாதீர்கள் - கரோனா மட்டும் ஆபத்து அல்ல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.