தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம், வாரசந்தை பகுதியில் நடைபாதையில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர். இதை அறிந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் தினமும் அவர்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் உணவு சமைத்து அவைகளைப் பொட்டலங்களாக்கி புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு வழங்கினர். உணவு வழங்கப்படுவதை அறிந்த அப்பகுதியிலுள்ள ஆதரவற்றவர்கள் அங்கு சென்று உணவு வாங்கிச் சென்றனர்.
பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளைத் தேடிச்சென்று அவர்களுக்கும் உணவு வழங்கினர். முழு ஊரடங்கு முடியும் வரை தினமும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும் என அத்தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணை: கருணாநிதி பிறந்தநாளன்று தொடக்கம்!