ஈரோடு: சத்தியமங்கலம் ஜீவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (மே 01) மே தினம் கொண்டாடப்பட்டது. மே தினத்தையொட்டி உழைக்கும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னரில் சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பி ஜெயபாலன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல். சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கிவைத்தனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்திலுள்ள தொழிலாளர்கள் விபத்து, நோய் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
எஸ்ஆர்டி கார்னரில் இருந்து புறப்பட்ட இருசக்கர தலைக்கவசம் பேரணி மைசூர் ரோடு, புதிய பாலம், கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையம் வரை சென்றடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: ஓவியர் செல்வம் புதுமையான முறையில் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து