ETV Bharat / state

'செப்டம்பரில் சசிகலா வருவார்... கட்சிக்குள் பிரளயம் உண்டாகும்' - பரபரப்பை கிளப்பும் பழனிசாமி - அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி

ஈரோடு: இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சசிகலா வெளிவர வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு வரும் பட்சத்தில் அதிமுகவிற்குள் சலசலப்புகள் ஏற்படும் எனவும் கூறி முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

former MP kc palanisamy speech about sasikala

author img

By

Published : Feb 21, 2020, 11:33 AM IST

முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதிமுகவின் பெயரைத் தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் பிணை பெற்று, தற்போது அவர் வெளியில் உள்ளார். இந்தச் சூழலில் பழனிசாமி ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள ஓட்டப்பாறையில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்று கூறிவருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து டெல்லி நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நான் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் வழக்கை வேறு கட்சியினர் தாக்கல் செய்தால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே ஏற்றிருக்காது. நான் அதிமுகவில் இல்லாமல், எப்படி என் வழக்கை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அதிமுகவில் தான் உள்ளேன்.

மேலும் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்கப் பிரச்னைக்கு சபாநாயகர் முடிவு காண்பார் என்று தீர்ப்பு வழங்கியிருப்பது முரணாக இருப்பதால், உச்ச நீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து பொதுவான தீர்ப்பை வெளியிட வேண்டும். சசிகலாவைப் பொறுத்தவரை அவரது தண்டனைக்காலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவடைந்தாலும், அவரது நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் அவர் வெளியில் வரவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அவ்வாறு அவர் வெளியில் வரும் பட்சத்தில், அதிமுகவிற்குள் சலசலப்புகளும் பிரச்னைகளும் ஏற்படலாம். ஏற்கெனவே அவருக்கு கட்சியில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு இருப்பதால், தற்போதைய அமைச்சர்களே அவரது பின்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது.

அதிமுகவிற்குள் நிலவும் பிரச்னையைப் பேசித் தீர்த்திட முடியும். அதிமுகவின் நலனுக்காக சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் என்னுடன் இணைந்து பேசித் தீர்க்கலாம். அதேபோல் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் விசாரணைக் குழுவில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கே.சி. பழனிசாமி பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்துவதற்கு கோயம்புத்தூர் காவல் துறையினர், எனக்குத் திட்டமிட்டு அனுமதி மறுத்து வருகின்றனர். அதிமுகவில் ஆட்சி, அதிகாரம் மட்டுமே வெற்றி பெறுமென்பது தவறானது. மேலும் அதிமுக அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள்' என்றார்.

இதையும் படிங்க: கிரண் பேடி உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.