ஈரோடு மாவட்டம், டி.என் பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் கொழிஞ்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று உலாவுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள், சிறுத்தைப்புலியை பிடிக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அதனை பிடிக்க தானியங்கி கேமராக்களை வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.