ETV Bharat / state

மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு! - மயில்கள் இறப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர்.

தோட்டத்தில் உயிரிழந்து கிடக்கும் மயில்கள்

author img

By

Published : Feb 6, 2020, 10:36 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பால்காரர் ராமசாமி - குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் மயில்கள், ஏழு பெண் மயில்கள் என மொத்தம் 14 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த மயில்களின் உடல்களைச் சேகரித்தனர். வனப்பகுதியிலிருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், மயில்களுக்கு மருந்து ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, மயில்களின் உடல்கள் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் உயிரிழந்து கிடக்கும் மயில்கள்

இதுகுறித்து ஆய்வகத்தின் அறிக்கைக்கு பின்னரே விவசாயிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும், மயில்கள் உயிரிழப்பு குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி நடராஜ் என்பவர் கூறுகையில், “வனத்துக்குள் வாழ்வாதாரத்தை இழந்த மயில்கள் காட்டுப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. மயில்கள் இரை தேடி வருவதைத் தடுத்து வனப்பகுதியில் அதற்கான தேவையை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மயில்கள் உயிரிழப்பு குறித்து பேசிய விவசாயி

இதையும் படிங்க: மர்மமான முறையில் இறந்த செம்மறி ஆடுகள்

Intro:Body:tn_erd_06_sathy_peacock_vis_tn10009

இறந்த மயில்கள் உடற்கூறு ஆய்வகத்தின் பிறகு சம்மந்தப்பட்டவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை:
வனச்சரக அலுவலர் பாண்டின் தகவல்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு மஞ்சள் வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாய பயிர்களை பயிர்செய்து வருகின்றனர்.வனப்பகுதியில் வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபிசெட்டிபாளையத்தில் வசிக்கும் பால்காரர் ராமசாமி குப்புலட்சுதி தம்பதியினருக்கு சொந்தமான வாழை தோட்டம் மற்றும் சோளக்காட்டில் 7 ஆண் மற்றும் பெண் 7 என மொத்தம் 14 மயில்கள் இறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தூக்கநாய்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை சேகரித்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர் இகு குறித்து டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் பாண்டியன் கூறுகையில் இறந்த மயிகளின் ரத்தமாதிரி மற்றும் சதைப்பகுதியில் மாதிர சேகரிக்கப்பட்டு சென்னை கிட்டி ஆய்வுகத்துக்கு அனுப்பப்பட்டுளளது. இது குறித்து ஆய்வகத்தின் அறிக்கைக்கு பின்னரே விவசாயிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. மயில் இறப்பு குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இது குறித்து நடராஜ் விவசாயி கூறுகையில் வனத்துக்குள் வாழ்வாரத்தை இழந்த மயில்கள் காட்டுப்பகதிக்குள் புகுந்துவிடுகின்றனய மயில்கள் இரை தேடி வருவதை தடுத்து வனப்பகுதியில் அதற்கான தேவையை நிறைவேற்ற வேண்டும் என்றார்

பேட்டி: நட்ராஜ், டிஎன் பாளையம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.