ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, ராஜன்நகர், பவானிசாகர், இக்கரை, தத்தப்பள்ளி, தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் மல்லிகைப்பூக்கள், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏலம் எடுத்த வியாபாரிகள் பூக்களை ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தற்போது ஐப்பசி மாதம், முகூர்த்த சீசன் என்பதால் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1050-க்கு விற்ற மல்லி இன்று ரூ.2505-க்கு விறப்னையானது. இதேபோல், கடந்த வாரம் சம்பங்கி கிலோ ரூ.90-க்கும் முல்லை ரூ.660-க்கும் ஜாதிமுல்லை ரூ.750-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால், மலர்சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சுபமுகூர்த்தம் தினம் எதிரொலி - பூக்களின் விலை அதிகரிப்பு