ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 96 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை அருகே உள்ள பவானி ஆற்றங்கரை ஓரம் அண்ணாநகர் பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் பவானிசாகர் பேரூராட்சிப்பணியாளர்கள், பவானி ஆற்றங்கரை வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், எந்த நேரமும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பவானி ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுடுதுறை, முடுக்கன்துறை, தொட்டம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றங்கரையோர கிராமப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய மூன்று கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு!