ETV Bharat / state

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Dec 13, 2022, 9:50 AM IST

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாகப் பவானி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூடலூர் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே இந்த மாயாற்று வெள்ளமும் பவானி ஆற்று நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால், பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 1,564 கன அடியிலிருந்து 2,637 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம் பெருந்துறை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அணையிலிருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.28 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டும் என்பதால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது.

இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர்வளத்துறை அலுவலர்கள், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வடகிழக்கு பருவமழையால் அணையின் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி 104.50 அடிக்கு மேல் வரும் நீர்வரத்து பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால், பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.26 அடியாகவும், நீர்வரத்து 2,637 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 300 கன அடியாகவும் மற்றும் நீர் இருப்பு 32.17 அடியாகவும் உள்ளது.

இதையும் படிங்க: ஏரி நிரம்பி சாலையில் ஓடும் தண்ணீர்; பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.