ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி, அரிகியம், மாக்கம்பாளையம், கோவிலூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் நேற்று (ஜன.10) கனமழை பெய்தது.
கனமழையினால் கோவிலூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் செந்நிறத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல கடம்பூரிலிருந்து குன்றிச் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மீது மழைநீர் சாலையைக் கடந்துசென்றது.
கனமழை பெய்ததால் வன ஓடைகளில் மழைநீர் ஓடுகிறது. இது வனவிலங்குகளின் குடிநீர்ப் பிரச்சினையை தற்காலிகமாகச் சரிசெய்தது.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஏற்படும் ஈரப்பதம் மரவள்ளிக்கிழங்கு பிடுங்குவதற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வலசை பறவைகளும் காரணம்' - மூத்த விஞ்ஞானி கருத்து