ஈரோடு: இன்று (ஆகஸ்ட் 7) காலை முதல் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மாலை 3 மணி அளவிலிருந்து வானததில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து ஈரோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரலுடன் தொடங்கிய மழை சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழையாக மாறி சாலைகளில் கடும் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரை புரண்டு ஓடியது.
குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர்
ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் ஈரோடு, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி, உள்ளிட்ட தாலுகாக்களில் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு பகுதியில் நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
மேலும் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ், அஹ்ரகாரம் ஓடை, கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பியதால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.