ETV Bharat / state

அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதி விபத்து - சுமார் 15 பேர் காயம்! - ஐந்து வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம், டானாபுதூரில் போலீஸ் சோதனைச் சாவடி அருகே அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Five
Five
author img

By

Published : Jan 1, 2023, 6:53 PM IST

ஈரோடு: திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்த லாரி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள டானாபுதூரில் போலீஸ் சோதனைச் சாவடி அருகே வந்தபோது பிரேக் வயர் அறுந்ததாகத் தெரிகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதியது. இதையடுத்து நிலைதடுமாறிய கார் மற்றொரு கார் மீது மோத, அந்த கார் ஆட்டோ மீது மோதியது. அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.

இந்த விபத்தில் கார்கள் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பக்ரைன் விமானத்தில் பயணித்த தஞ்சாவூர் பயணி நடுவானில் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.