ETV Bharat / state

ஈரோட்டில் லாரி மோதி தீயணைப்பு வீரர் உயிரிழப்பு - ஈரோடு லாரி விபத்தில் தீயணைப்பு வீரர் மரணம்

ஈரோடு: மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!
லாரி மோதி தீயணைப்பு வீரர் உயிரிழப்பு!
author img

By

Published : Oct 19, 2020, 11:45 AM IST

ஈரோடு சூரம்பட்டி அருகேயுள்ள திரு.வி.க வீதி பகுதியில் வசித்துவந்தவர் சிலம்பரசன். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று, இவரது மனைவி செளந்தர்யா தற்போது 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

சிலம்பரசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், இவரது சகோதரி இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக நான்கு நாள்கள் விடுப்பு எடுத்துள்ள சிலம்பரசன், இன்று அதிகாலை தனது உறவினரை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று, ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, மீன்சந்தை அருகேயுள்ள ஸ்டோனி பாலம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, பின்னால் அதிவேகமாக வந்த சவுக்கு மரம் பாரம் ஏற்றிவந்த சரக்கு லாரி சிலம்பரசனின் வாகனத்தின் பின்புறமாக பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் சூரம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, படுகாயமடைந்த சிலம்பரசனை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சுமார் 1 மணி நேரம் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார். இச்சம்பவம், அவரது உறவினர்கள், தீயணைப்புத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.