ETV Bharat / state

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்! - 5 lakh things destroyed in fire

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கு இறையாகியுள்ளது.

தீயை போராடியணைத்த தீயணைப்பு வீரர்கள்
author img

By

Published : Apr 11, 2019, 9:46 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியில் தனியார் சொகுசு விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியில் உள்ள அறை ஐந்தில் எதிர்பாராத விதமாக குளர்சாதனப் பெட்டியில் இருந்து புகை வந்துகொண்டிருந்தத நிலையில், திடீரென குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிறதியது.

இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அறையில் இருந்த பொருட்கள் பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விடுதியினுள் நுழைய முற்பட்டனர்.

ஆனால், தீ மளமளவென பரவியதால், ஜன்னல்களை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சியால் சுமார் ஒரு மணிநேரம் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை முற்றியும் அணைத்தனர். இதனால் விடுதியில் கட்டில் மெத்தை மரப்பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ விபத்து

கோபிசெட்டிபாளையத்தில் மின்கசிவால் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருள்கள் நாசம்

TN_ERD_SATHY_03_11_FIRE_INCIDENT_VIS_TN10009
(VISUAL FTP இல்)

கோபிசெட்டிபாளையம்  நாயக்கன்காடு பகுதியில் செயல்படும் தனியார் தங்கும் விடுதியில் குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவினால் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிபிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியில் தனியார் சொகுசு விடுதி நடைபெற்றுவருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. வேலை நாட்கள் என்பதால் 10க்கும் குறைவான அறைகளிலேயே விருந்தினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் 5 ஆம் எண் அறையிலிருந்து புகை வந்துள்ளது. அதைப்பார்த்த விடுதி பணியாளர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அறையிலிருந்த குளர்சாதனப்பெட்டியிலிருந்து புகை வந்துகொண்டிருந்துள்ளது. அப்பொழுது தீரென குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிறதியுள்ளது. அங்கிருந்த பணியாளர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் குளிர்சாதப்பெட்டி வெடித்த நொடியில் ஏற்பட்ட தீவிபத்தில் அறையில் இருந்த பொருட்கள் பற்றி எரிய தொடங்கியுள்ளது. துரித கதியில் செயல்பட்ட பணியாளர்கள் மற்ற அறையில் தங்கியிருந்த விருந்தினர்களை வெளியேற்ற தொடங்கினர். அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விடுதியினுள் நுழைய முற்பட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் விடுதியினுள் நுழைய முடியாமல் பக்கவாட்டியில் உள்ள ஜன்னல்களை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விடுதியில் அலங்கால கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து புகையை வெளியேற்றினர். ஆதனை தொடர்ந்து தொடர் முயற்சியால் சுமார் ஒரு மணிநேரம் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை முற்றியும் அணைத்தனர். இதனால் விடுதியில் கட்டில் மெத்தை மரப்பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தினால் நாயக்கன்காடு பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

TN_ERD_SATHY_01_11_FIRE_INCIDENT_VIS_TN10009
(VISUAL FTP இல்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.