ஈரோடு : மொடக்குறிச்சி தூரப்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஆராயி (40) இவர்களுக்கு திருமலை, சுரேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆராயி செல்போன் எண்ணிற்கு கோவை கிருஷ்ணா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தாங்கள் 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் 5 லட்சம் ரூபாய் கடனாக தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஆராயியின் மகன் திருமலை வங்கிக் கணக்கிலிருந்து கிருஷ்ணா பைனான்ஸ் பங்கஜ் குமார் என்பவரின் வங்கிற்கு முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாயை பேடிஎம் வாயிலாக அனுப்பியுள்ளனர்.
இரண்டாம் கட்ட தவனை
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து ஆராயி கிருஷ்ணா பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டபோது மேலும் ஆவணம் தயாரிப்பதற்கு 25 ஆயிரம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் ஆராயி மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டாம் கட்ட தவணையாக அனுப்பியுள்ளார்.
மூன்றாம் கட்ட தவணை
பின்னர் மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து ஆராயி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது உடனடியாக பணம் கிடைக்க வேண்டுமானால் மூன்றாம் கட்ட தவணையாக 38 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இதையடுத்து ஆராயி மீண்டும் 38 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆராயி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது மேலும் 50 ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் உங்களது வங்கிக் கணக்கு 5 லட்சம் ரூபாய் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வருமென்று கூறியுள்ளனர்.
நிதி நிறுவனத்தின் மீது புகார்
இதனால் சந்தேகமடைந்த ஆராயி ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக கூறி முன்பணம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: