ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிகப்படியான யானைகள் உள்ளன. இவை சில சமயங்களில் உணவு தேடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, அங்குள்ள மக்களை அச்சுறுத்திவருவது தொடர்கதையாகியுள்ளது.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி சாலம்மா (50). இவர் நேற்றிரவு (செப்.06), தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ் பயிருக்கு காவலுக்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த யானை, சாலம்மாளைத் துரத்தி மிதித்துள்ளது. இதில் அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். யானை தாக்கி பெண் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவையில் கணவன் கொலை - மனைவியும் அவர் கூட்டாளியும் கைது!