ETV Bharat / state

நேந்திரம் வாழை விலை சரிவு: விவசாயிகள் கவலை! - nenthiram valai farmers suffer in sathy

நேந்திரம் வாழை கிலோ 6 ரூபாயாகச் சரிந்துள்ளதால், அந்த வகை வாழையை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

nenthiram valai farmers suffer in sathy
நேந்திரம் வாழை விலை சரிவு; விவசாயிகள் கவலை
author img

By

Published : Dec 29, 2020, 6:35 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரமான கே.என். பாளையம், தாச கவுண்டன்புதூர், கொடிவேரி, பவானிசாகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேந்திரம் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, நேந்திரம் வாழை கிலோ 6 ரூபாயாக சரிந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய வாழை விவசாயி செல்லப்பன், "12 மாத பயிரான வாழை நேந்திரத்தை உற்பத்தி செய்வதற்கு கிலோ 15 ரூபாய் வரை செலவாகிறது. விஷேச நாள்களில் வாழை கிலோ ரூ. 40வரை விற்கப்பட்டது. தற்போது, சொட்டுநீர் பாசனம் மூலம் நேந்திரம் வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், அதன்விலை உற்பத்தி செலவைக்கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேந்திரம் வாழை விலை சரிவால் விவசாயிகள் கவலை

தற்போது, கிலோ 6 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது பனிக்காலம் என்பதால், வாழைக்கு போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. இது தவிர, மொந்தன், பூவன், தேன் வாழை, கதலி போன்ற வகைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் அதன்விலை பாதியாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், வாழை சாகுபடி கேள்விக்குறியாகும். கூட்டுறவுச் சங்கம் மூலம் விற்பனை செய்யும்போது வாழை கிலோவுக்கு 3 ரூபாய் மட்டுமே கூடுதலாக கிடைக்கிறது. ஆதலால், இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அன்னமிடும் கைகளுக்கு அவல விலங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.